Home One Line P1 பொருளாதார ஊக்கத் திட்டம்: பி40, எம்40 பிரிவினருக்கு உதவும் வகையில் 10 பில்லியன் ஒதுக்கீடு!

பொருளாதார ஊக்கத் திட்டம்: பி40, எம்40 பிரிவினருக்கு உதவும் வகையில் 10 பில்லியன் ஒதுக்கீடு!

620
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த கொவிட்-19 பொருளாதார ஊக்கத் திட்டத்தில், ‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதல் முறையாக பி40 பிரிவினருக்கு மட்டுமல்லாமல், எம்40 பிரிவினருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவர்களில் தனியார் தொழிலாளர்கள், பெல்டா குடியேறிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் எம்40 குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதற்கும் கீழானவர்கள் அனைவரும் அடங்குவர் என்று அவர் விளக்கினார்.

  • 4 மில்லியன் குடும்பங்கள் வரை, மாத வருமானம் 4,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாகப் பெறுவோர்க்கு 1,600 ரிங்கிட் வழங்கப்படும். முதல் கட்டமாக 1,000 ரிங்கிட் ஏப்ரல் மாதத்திலும் 600 ரிங்கிட் மே மாதத்திலும் வழங்கப்படும்.
  •  1.1 மில்லியன் குடும்பங்களுக்கு, அதாவது 4,000 ரிங்கிட் முதல் 8,000 ரிங்கிட் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 1,000 ரிங்கிட் வழங்கப்படும். முதல் கட்டமாக 500 ரிங்கிட் ஏப்ரல் மாதத்திலும், மீதமுள்ள 500 ரிங்கிட் மே மாதத்திலும் வழங்கப்படும்.
  • 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, 2,000 ரிங்கிட்டிற்கு குறைவாக சம்பளம் பெறுவோருக்கு 800 ரிங்கிட் வழங்கப்படும். முதல் கட்டமாக 500 ரிங்கிட் ஏப்ரல் மாதத்திலும், 300 ரிங்கிட் மே மாதத்திலும் வழங்கப்படும்.
  • 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 400,000 திருமணமாகாத, 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை சம்பாதிப்பவர்களுக்கு 500 ரிங்கிட் வழங்கப்படும். முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்தில் 250 ரிங்கிட்டும், மே மாதத்தில் 250 ரிங்கிட்டும் செலுத்தப்படும்.

கூடுதலாக, நடப்பு பிஎஸ்எச் திட்டத்தின் கீழ் மீதமுள்ள 3.2 பில்லியன் ரிங்கிட் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.