கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கும் வரை ஏப்ரல் 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அரசாங்கம் இலவச இணைய சேவைகளை வழங்கும் என்று பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சிறப்பு தொகுப்புக்காக அரசாங்கம் 600 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
கூடுதலாக, இணைய வேகம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளின் தரம் குறையாமல் இருக்க கூடுதல் 400 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.