Home One Line P2 கொவிட்-19 : அமெரிக்காவில் மட்டும் 240,000 பேர்கள் வரை மடியலாம்

கொவிட்-19 : அமெரிக்காவில் மட்டும் 240,000 பேர்கள் வரை மடியலாம்

822
0
SHARE
Ad

வாஷிங்டன் – நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் கொவிட்-19 பாதிப்பால் 830 பேர்கள் மரணமடைந்திருக்கின்றனர். ஒரே நாளில் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட மரண எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.

185 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 பீடித்திருக்கும் நிலையில், இதுவரையில் 3,800-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கின்றனர். வாஷிங்டன் மாநிலத்தில் மட்டும் 5,200-க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று பாதித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதே வேகத்தில் சென்றால் நாடு முழுவதிலும் கொவிட்-19 பாதிப்பால் 100,000 முதல் 240,000 வரையிலான மரண எண்ணிக்கை நிகழும் என சுகாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

அமெரிக்காவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான நியூயார்க்கின் ஆளுநர் குவோமாவின் சகோதரருக்கே கொவிட்-19 பீடித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை கொவிட்-19 தொடர்பான விளக்கங்களை பத்திரிகையாளர் சந்திப்பின் வழி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரலையாக தொலைக்காட்சிகளில் வழங்கினார்.