Home One Line P2 கொவிட்-19 : அமெரிக்காவின் மரண எண்ணிக்கை 5100-ஐத் தாண்டியது – அடுத்த நிலையில் ஸ்பெயின்!

கொவிட்-19 : அமெரிக்காவின் மரண எண்ணிக்கை 5100-ஐத் தாண்டியது – அடுத்த நிலையில் ஸ்பெயின்!

536
0
SHARE
Ad

வாஷிங்டன் – இதுவரை இல்லாத அளவுக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் அதிக பாதிப்புகளை உலகிலேயே வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காதான் எதிர்நோக்கியுள்ளது.

நேற்றுவரையில் அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,100-ஐத் தாண்டியிருக்கிறது. இதுவரையில் 216,500 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. உலக நாடுகளில் இதுவே மிக அதிகமாகும்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  884 ஆக இருந்தது. கொவிட்-19 பிரச்சனை தொடங்கியதிலிருந்து மிக அதிகமான மரண எண்ணிக்கை நேற்றுதான் நிகழ்ந்திருக்கிறது.

நியூயார்க்கில் மட்டும் மரண எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் கொவிட்-19 பாதிப்புகளை ஒப்பீட்டு ஆய்வு செய்து வரும் ஜோன் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஆய்வுகளின்படி உலகம் முழுவதிலும் 937 ஆயிரம் பேர்கள் இதுவரையில் பாதிப்புள்ளாகியிருக்கும் நிலையில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளுக்கு முகக் கவசங்களும், பாதுகாப்புக் கவசங்களும் மில்லியன் கணக்கில் தேவைப்படுவதால் அந்த உபகரணங்களின் கையிருப்புகள் தீர்ந்து விட்டன.

ஸ்பெயின் நாட்டிலும் மரண எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் திகழ்கிறது.

இந்நாட்டில் 100,000 -க்கும் மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. 102,

நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1) ஒரு நாளில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 864 ஆக இருந்தது. இதுவரையில் நிகழ்ந்த மிக அதிகமான ஒருநாள் மரண எண்ணிக்கை இதுவாகும்.

இதுவரையில் அதிக மரண எண்ணிக்கை இத்தாலியில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து ஸ்பெயின் திகழ்கிறது.

102,136 கொவிட்-19 பாதிப்புகளை ஸ்பெயின் பதிவு செய்து, அதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,053 ஆக உயர்ந்திருக்கிறது.