கோலாலம்பூர்: ஏப்ரல் 1 வரையிலும் மொத்தம் 2,359 தன்னார்வலர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராட சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம், போன்ற பிற பொது சுகாதார மையங்களில் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை உதவிகளை செய்வதாக அது தெரிவித்துள்ளது. மேலும், கொவிட்-19 சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தப்படாத சம்பங்களை கையாள்வதில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளுக்கும் அவர்கள் உதவி செய்து வருவதாக அது தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பும், பொது அல்லது தனியார் துறையில் பணியாற்றுவோர், துறைத் தலைவர் அல்லது முதலாளிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர் ஆரோக்கியமான உடல் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருப்பது அவசியம் என்று அது தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும், கொவிட்-19 பாதிப்புக்குள்ளான நாடுகள் அல்லது பகுதிகளுக்குச் சென்ற பயண வரலாறும், கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த வரலாறும் இருக்கக் கூடாது என்றும் அது விளக்கியுள்ளது.