Home One Line P1 கொவிட்-19: ரம்லான் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வை நடத்த இது நேரமில்லை!- ஜோகூர் சுல்தான்

கொவிட்-19: ரம்லான் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வை நடத்த இது நேரமில்லை!- ஜோகூர் சுல்தான்

621
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கொவிட் -19 தொற்றுநோய்களின் போது ரமலான் சந்தை நடத்தக்கூடாது என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் உத்தரவிட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் புதிய சம்பவங்கள் கண்டறியப்படுகின்றன. பொது மக்கள் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும் நடத்த இப்போது நேரம் இல்லை.”

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முழுமையான விளைவை முதலில் அடைய வேண்டும். இதில் நாம் முன்னுரிமையும், அக்கறையும் செலுத்த வேண்டும். ரமலான் சந்தை காத்திருக்க முடியும்” என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“மக்களின் நலனைப் பாதுகாக்க இங்கு மட்டுமல்ல, எங்கும் இம்மாதிரியன நேரத்தில் ரம்லான் சந்தை ஏற்பாடு செய்வது சரியாக இருக்காது.”

“இது நடத்தப்பட்டால், நோய் பரவுவதை தடுக்க இயலாது. இந்த தொற்றுநோயை ஒழிக்க நினைக்கு அரசின் நடவடிக்கைக்கு இது உதவாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.