Home One Line P1 கொவிட்-19: 41 பிபிஆர் குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

கொவிட்-19: 41 பிபிஆர் குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

586
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் 41 பொது வீட்டுவசதி திட்டங்கள் (பிபிஆர்) பகுதிகளில், கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை செயல்படுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது ஏப்ரல் 14 வரை நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இந்த இலக்கு அடையப்படும் என்று அதன் அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தற்போது, சுபாங் பள்ளத்தாக்கைச் சுற்றி முதல் திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, இது அடுத்த செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“நாங்கள் நாடு முழுவதும் 41 பிபிஆர்களில் இதனை செயல்படுத்துவோம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்ய, அமைச்சின் கீழ் பல்வேறு துறைகள் எங்களுக்கு உதவுகின்றன.” என்று அவர் இன்று வியாழக்கிழமை கூறினார்.