கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் மலேசிய காவல் துறை அமலாக்கம் இப்போது ‘கடுமையாக’ செயல்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
சாலை தடுப்புகளில் தனிநபர் கைதுகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டாலும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு இணங்க மறுக்கும் பலர் இன்னும் உள்ளதாக அவர் கூறினார்.
“ஆரம்பத்தில் மென்மையாக ஆலோசனை வழங்கினர். இப்போது காவல் துறையினரின் முறை கடுமையாக உள்ளது. எனவே மக்கள் கீழ்ப்படிவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.