Home One Line P2 கொவிட்-19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது!

கொவிட்-19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது!

899
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்கள் 1 மில்லியன் பேர்களை எட்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுமார் 1,002,159 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டதாகவும், 51,485 பேர் இறந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. மேலும், 200,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்நோயிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் இந்த எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,900-ஐத் தாண்டியது. அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் உள்ளது.

240,000 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முறையாக பதிவுசெய்யப்பட்டதிலிருந்து, இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.