Home One Line P2 சிங்கப்பூர்: ஏப்ரல் 7 முதல் மே 4 வரை அத்தியாவசிய சேவைகள் தவிர பெரும்பாலான பணியிடங்கள்...

சிங்கப்பூர்: ஏப்ரல் 7 முதல் மே 4 வரை அத்தியாவசிய சேவைகள் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்படும்!

560
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நேரடியாக தொலைக்காட்சியில் உரையாற்றி கொவிட்-19 நிலைமை குறித்த ஆக கடைசி நிலவரத்தை வழங்கினார்.

அதில் அவர் அதிகரித்து வரும் தொற்றுநோய்களை முன்கூட்டியே அகற்றுவதற்கான “தீர்க்கமான நடவடிக்கை” எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு கணிசமாக தீவிரமான  நடவடிக்கைகளை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 நிலைமை குறித்து லீ மக்களை நேரலையில் சந்தித்தது இது மூன்றாவது முறையாகும்.

தினசரி புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையும், உள்ளூர் தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதைக் குறிப்பிட்ட லீ, தீவிரமான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு எடுக்கப்படுவதாகவும், இது பெரிய பாதிப்பு அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் கூறினார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் மே 4 வரை, அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர – பெரும்பாலான பணியிடங்கள் மூடப்படும் என்று அவர் அறிவித்தார்.

உணவு நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் முக்கிய வங்கி சேவைகள் திறந்த நிலையில் இருக்கும்.

அடுத்த புதன்கிழமை முதல், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு முழுமையாக வீட்டு அடிப்படையிலான கற்றலுக்கு கல்வித் துறை நகரும் என்று அவர் கூறினார்.

அனைத்து பாலர் பள்ளி மற்றும் மாணவர் பராமரிப்பு மையங்களும் மூடப்படும். ஆனால், தொடர்ந்து பணியாற்ற வேண்டிய மற்றும் மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாத பெற்றோரின் குழந்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

வகுப்புகள் மே 5-ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.

மக்கள் நடமாட்டம் மற்றும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். முடிந்தவரை, தனிநபர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், மேலும் அவர்களின் குடும்பத்தினர், குறிப்பாக வயதானவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று லீ கூறினார்.

தனிநபர்கள் அத்தியாவசிய சேவைகள் அல்லது முக்கிய பொருளாதார துறைகளில் பணிபுரிந்தாலோ அல்லது அருகாமையில் உணவு அல்லது உடற்பயிற்சியை செய்ய மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்னவென்றால், நம் அனைவரையும் உடல் தொடர்பைக் குறைக்க வேண்டும். நாம் வெளியே செல்லவில்லை என்றால், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தால், வைரஸ் பரவ முடியாது. இது எளிதானது,” என்று லீ கூறினார்.