Home One Line P2 கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி!

கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி!

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் பாங்கியில் உள்ள தெனெரா (Hotel Tenera) தங்கும் விடுதி கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெரிய அளவில் காவல் துறையினருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

“♥ POLIS” என்ற செய்தியை அக்கட்டிடத்தில் வெளியிட்டதற்கு காவல் துறை அத்தங்கும் விடுதிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

அத்தங்கும் விடுதியில் உள்ள அறைகளின் விளக்குகளை அவர்கள் எரியவைத்து ஆக்கபூர்வமான அணுகுமுறையை கையாண்டதாக காவல் துறை தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

“கொவிட்-19 பாதிப்பிலிருந்து மலேசியாவை விடுவிக்க நாம் ஒன்றாக போராடுவோம். தெனெரா தங்கும் விடுதிக்கு மீண்டும் எங்களது நன்றி!” என்று அது குறிப்பிட்டிருந்தது.