Home கலை உலகம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி

திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி

854
0
SHARE
Ad

சென்னை – கொவிட்-19 பாதிப்பால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பிரதிநிதிக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு (பெப்சி) நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பிரபல நடிகை நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் நிதி உதவியை இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 4)  இந்த சம்மேளனத்திற்கு வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவரைத் தொடர்ந்து பல நடிகைகளும் தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கியிருக்கின்றனர்.

ஏற்கனவே, ரஜினிகாந்த் 5 மில்லியன் ரூபாய்களும், கமல்ஹாசன் 1 மில்லியன் ரூபாய்களும் மற்ற பல நட்சத்திரங்களும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் நிதி உதவி வழங்கியிருக்கின்றனர்.

மூத்த நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினர் 3 மில்லியன் ரூபாய்கள் வழங்கியிருக்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 100,000 ரூபாய்களை தனது நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.