Home One Line P2 இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு

இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு

691
0
SHARE
Ad

தோக்கியோ – கொவிட்-19 தொற்று நோயைக் கண்டுபிடிக்கத் தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள், பரிசோதனை முடிவுகளைக் காட்ட நீண்ட காலம் பிடிப்பதால், இரண்டே மணி நேரத்தில் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் நவீன கருவி ஒன்று ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

புகைப்படக் கருவிகள் (கேமரா), புகைப்படத்திற்கான பிலிம் சுருள் போன்றவற்றை தயாரிப்பதில் ஒரு காலத்தில் முன்னோடியாக விளங்கி வந்த புஜிபிலிம் நிறுவனத்தின் (Fujifilm Holdings Corp) துணை நிறுவனமான புஜிபிலிம் வாகோ பியூர் கெமிகல் கார்ப்பரேஷன் (Fujifilm Wako Pure Chemical Corp) இந்தக் கருவியைத் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி இந்தப் புதிய கருவி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

இப்போதைய நடைமுறைப்படி கொவிட்-19 இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 மணிநேரம் பிடிக்கிறது.

காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு எதிராக இதே நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் மருந்து தற்போது சீனாவில் சிகிச்சைக்காக பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.