Home One Line P2 கொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு...

கொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்

893
0
SHARE
Ad

சென்னை – தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமையுடன் கொவிட்-19 புதிய பாதிப்புகள் 74 ஆக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அதில் 73 பாதிப்புகள் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் மூலம் தொற்றப்பட்ட பாதிப்புகள் என உறுதியாகியிருக்கிறது.

இந்தியா முழுவதிலும் 2,906 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மரண எண்ணிக்கை 77 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் ஒருவர் மும்பையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியைச் சேர்ந்தவர் என்பதால், சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அந்தப் பகுதியில் மேலும் கூடுதலான கொவிட்-19 பாதிப்புகள் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுவரையில் நிசாமுடின் மர்காஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சுமார் 500 பேர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,800 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.