Home One Line P2 கொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்

கொவிட்-19 : சிங்கப்பூரில் 75 புதிய பாதிப்புகள் – அதில் மூவர் மலேசியர்கள்

652
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின்படி 75 புதிய கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இதில் மூவர் மலேசியர்களாவர்.

அந்த மூவரில் ஒருவர் சிங்கையில் குடிநுழைவு அனுமதியோடு பணிபுரியும் 32 வயது கொண்ட நபராவார்.

#TamilSchoolmychoice

மேலும் இருவர் மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண்களாவர். ஒருவர் 24 வயதும் மற்றொருவர் 20 வயதும் கொண்டவர்களாவர்.

இதுவரையில் சிங்கப்பூரில் 1,189 கொவிட் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

இன்று கொவிட்-19 மரணத்தால் மற்றொரு மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிங்கையில் மரண எண்ணிக்கை 6-ஆக உயர்ந்திருக்கிறது.

இதுவரையில் 297 பேர்கள் முற்றாகக் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.

மேலும் 500 பேர்கள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 பேர்கள் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரையில் 16,910 பேர்கள் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை பிரதமர் லீ சியன் லூங் பிறப்பித்திருக்கிறார்.