Home One Line P1 கொவிட்-19: சரவாக்கில் 3-வது நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு!

கொவிட்-19: சரவாக்கில் 3-வது நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு!

515
0
SHARE
Ad

கூச்சிங்: சரவாக்கைச் சேர்ந்த கோத்தா சாமாராஹான் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபியா வாங் கொவிட் -19 நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இதன் மூலமாக இதுவரையிலும் சரவாக்கில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நோய்க்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தை மாநில சுற்றுலா, கலை, கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோ அப்துல் காரிம் ரஹ்மான் ஹாம்சா உறுதிப்படுத்தியதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“இப்போது எங்களுக்குத் தெரிந்தவரை, ஓர் உதவி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட் -19 நோயிக்கு நேர்மறையான முடிவைக் கொண்டுள்ளனர். ” என்று அவர் கூறினார்.

சரவாக் உதவி போக்குவரத்து அமைச்சர் டத்தோ டாக்டர் ஜெரிப் சுசில் கொவிட் -19- க்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அவர் வியாழக்கிழமை இரவு (ஏப்ரல் 2) சிகிச்சைக்காக சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தியிருந்தார்.

மம்போங் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெரிப், மாநாடு ஒன்றுருடன் தொடர்பு கொண்ட ஒருவருடன் தொடர்பு கொண்டபோதுதான் வைரஸ் பாதித்ததாக அவர் கூறினார்.

முன்னதாக, இந்த நோய்க்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் டாக்டர் கெல்வின் யி (பண்டார் கூச்சிங்) நோயிலிருந்து குணமடைந்துள்ளார். சரிகேய் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ வோங் இன்னும் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.