Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரைக் குறை கூறுவதை நிறுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டை தற்போது பாதித்துள்ள கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில், வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு பொதுமக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“கொவிட்-19 பாதிப்புகள் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் சாலைத் தடுப்புகளை நாங்கள் ஏற்படுத்த வேண்டி உள்ளது. அத்துடன் வீட்டை விட்டு மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்.”

“சேவைத் துறையில் பட்டியலிடப்படாத நபர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை புரிந்து கொள்ளவும், சாலைத் தடுப்புகள் வழியாக செல்லவும் நான் அறிவுறுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

நியாயமானக் காரணங்களுக்காக ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளாரா என்பது கவனிக்கப்பட வேண்டியிருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் பொறுமையாக இருக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

“நெடுஞ்சாலை அல்லது நகரத்தில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் போன்ற அற்ப விஷயங்களைப் பற்றி மக்கள் புகார் செய்யக்கூடாது.”

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்பதாக நெடுஞ்சாலைகளிலும் கோலாலம்பூரிலும் போக்குவரத்து நெரிசல் குறித்து சிந்திக்கும்படி நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். சாலைத் தடுப்புகள் குறித்து குற்றம் சாட்டப்படக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.