Home One Line P1 கொவிட்-19: சாத்தியமான சிகிச்சை முறையை பரிசோதிக்க மலேசியா தேர்வு!

கொவிட்-19: சாத்தியமான சிகிச்சை முறையை பரிசோதிக்க மலேசியா தேர்வு!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19- க்கான சாத்தியமான சிகிச்சையை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டு ஆராய்ச்சியில் பங்கேற்க மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதாரம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு ரெம்டெசிவிர், லோபினாவிர் அல்லது ரிடோனாவிர், இன்டர்பெரான் பீட்டா, குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய நான்கு வகையான மருந்துகளைப் பயன்படுத்தி சேர்க்கை சிகிச்சையின் செயல்திறனைப் பற்றிய தரவுகளை சேகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அர்ப்பணிக்கப்பட்ட மொத்தம் ஒன்பது சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“துவாங்கு பவ்சியா மருத்துவமனை, சுல்தானா பஹியா மருத்துவமனை, பினாங்கு மருத்துவமனை, சுங்கை புலோ மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, மலக்கா மருத்துவமனை, தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனை, சரவாக் பொது மருத்துவமனை மற்றும் குவின் எலிசபெத் மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து பரிசோதனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையை சுகாதார அமைச்சகம் விரைவாக கண்காணித்து வருவதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

16 தொற்று நோய் மருத்துவர்கள் மற்றும் அந்தந்த மருத்துவமனைகளில் மருந்தாளுநர்கள் அடங்கிய குழுவுடன் இந்த ஆய்வுக்கு பினாங்கு மருத்துவமனை தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் சோவ் டிங் சூ தலைமை தாங்குவார்.