Home One Line P2 கொவிட்-19: நியூயார்க்கில் மலாயா புலிக்கு பாதிப்பு-மனிதனிடமிருந்து தொற்றிய முதல் சம்பவம்!

கொவிட்-19: நியூயார்க்கில் மலாயா புலிக்கு பாதிப்பு-மனிதனிடமிருந்து தொற்றிய முதல் சம்பவம்!

634
0
SHARE
Ad

நியூயார்க்: நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் நான்கு வயது நடியா என்ற பெண் மலாயா புலி, கொவிட் -19 பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

மனிதனிடமிருந்து இவ்விலங்கிற்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என்று அனைத்துலக ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.

#TamilSchoolmychoice

நடியா மற்றும் அதன் சகோதரி அசுல், அவற்றுடன் இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்கள் இருமல் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும், அவை குணமடைந்து வருவதாகவும் அயோவாவில் உள்ள அமெரிக்க தேசிய கால்நடை சேவை தெரிவித்துள்ளது.

மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரால் இப்புலிக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

“நாங்கள் நடியாவை மிகவும் கவனமாக சோதித்து வருகிறோம். கொவிட் -19 பற்றி எங்களிடம் உள்ள எந்த முடிவும் கொரோனாவைரஸ் நோயைப் பற்றிய உலகளாவிய புரிதலுக்கு பங்களிக்கும் என்பதை உறுதி செய்வோம்” என்று மிருகக்காட்சிசாலை ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.