Home One Line P2 பொருளாதார ஊக்கத் திட்டம்: கூடுதல் 10 பில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்படும்!- பிரதமர்

பொருளாதார ஊக்கத் திட்டம்: கூடுதல் 10 பில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்படும்!- பிரதமர்

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கூடுதல் பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறை நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு வேலைவாய்ப்பையும், கிட்டத்தட்ட 40 விழுக்காடு தேசிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இவர்களுக்கான கூடுதல் உதவித் தொகுப்பாக, பிரதமர் 10 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகையை அறிவித்தார்.

மார்ச் 27-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட ஊதிய மானிய திட்டத்திற்கான 5.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு 13.8 பில்லியனாக உயர்த்தப்படுகிறது.

உள்ளூர் தொழிலாளர்கள் 4,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைத்து நிறுவனங்களும் பின்வருமாறு ஊதிய மானிய உதவி வழங்கப்படும்:

  • 200- க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, ஒரு ஊழியருக்கு 600 ரிங்கிட் மானியம் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும், மானியங்களுக்கு தகுதியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 100-லிருந்து 200 தொழிலாளர்களாக உயர்த்தப்படும்.
  • 76 முதல் 200 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, நிறுவனம் ஓர் ஊழியருக்கு 800 ரிங்கிட் ஊதிய மானியத்தைப் பெறும்.
  • 75 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு, நிறுவனம் ஓர் ஊழியருக்கு 1,200 ரிங்கிட் மானியம் பெறும்.

“இந்த கூடுதல் உதவியின் மூலம், நிறுவனம் அதிக நன்மைகளையும் உதவிகளையும் பெறும்.”

“இந்த உதவி மூன்று மாதங்களுக்கானது, இது ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் எஸ்எஸ்எம் அல்லது சொக்ஸோவில் பதிவுசெய்த முதலாளிகளுக்கு மட்டுமே.”

“இதனால், சுமார் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த உதவியைப் பெற விரும்பும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இது ஊதிய மானியம் பெற்ற மூன்று மாதங்களுக்குள்ளும், அதன்பிறகும் ஆகும்.