Home One Line P1 கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு திரும்ப...

கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு திரும்ப முடியாது!

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை எனும் உத்தரவாதத்தை, சிங்கப்பூர் அரசு வழங்காவிட்டால், அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

முன்னதாக ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் இது என்று அவர் கூறினார். சிங்கப்பூர் குடியரசில் பணிபுரியும் மலேசியர்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

“ஒப்பந்தத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதவள அமைச்சகம் சம்பந்தப்பட்ட ஒரு செயற்குழு புதிய விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும். நாளை (ஏப்ரல் 7) வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவிக்கும்.”

“இதுவரை, நம் மக்களை நம் நாட்டுக்கு (திரும்ப) நாம் அனுமதிக்கவில்லை,” என்று அவர் இன்று திங்கட்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு அமைச்சர்கள் சிறப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.