Home One Line P1 பெந்தோங் கைதியின் இறப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று காரணமில்லை!

பெந்தோங் கைதியின் இறப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று காரணமில்லை!

481
0
SHARE
Ad

குவாந்தான்: பெந்தோங் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி கொவிட்- 19 நோயால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

30 வயதான அந்நபர் கொவிட் -19 பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட காவல் துறைத் தலைவர் யூசோப் யூனிஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

திருடியதற்காக ஏப்ரல் 2- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்நபர், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி ஏப்ரல் 5-ஆம் தேதி காலையில் இறந்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் கொவிட் -19 பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, விசாரணையில் பாதிக்கப்பட்டவர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது” என்று யூசோப் தெரிவித்தார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணத்தை தீர்மானிக்க முடியவில்லை என்றும், காவல் துறை இரசாயன ஆய்வகத்திலிருந்து முடிவுக்காக காத்திருக்கிறது, என்றும் அவர் கூறினார்.

குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் தடயவியல் துறையால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விசாரணையின் முடிவு நிலுவையில் உள்ளதால், அந்த நேரத்தில் திடீர் மரணம் என்று காவல் துறையினர் வகைப்படுத்தினர்.

பாதிக்கப்பட்டவருக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணியளவில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை அறிந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர்.

இருப்பினும், மருத்துவ வண்டி வந்தபோது அந்நபர் இறந்து கிடந்தார். அதிகாலை 1.10 மணிக்கு அவர் இறந்துவிட்டார்.

இந்த மரணம் எவ்வாறு நடத்தது என்பது குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும், விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.