Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் நாடு முழுவதும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது என்று காவல் துறையினரிடமிருந்து எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நிலவரப்படி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 403 நபர்கள் சாலைத் தடுப்பு நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.