Home One Line P1 கொவிட்-19: தேவைப்படும் அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும்!

கொவிட்-19: தேவைப்படும் அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும்!

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 24.62 மில்லியன் இலவச முகக்கவசங்கள் தேவைப்படும் மலேசியர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் இந்த முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்படவில்லை, ஆனால், அவை அரசாங்கத்தால் வாங்கப்பட்டன என்று அவர் தெளிவுப்படுத்தினார்.