Home One Line P1 “நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2020” – மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்! களம் 3

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2020” – மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்! களம் 3

1785
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு மூன்றாம் முறையாக நடத்தப்படவுள்ளது. மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கமாகும். இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப்பெயரான நல்லார்க்கினியன் பெயரில் இப்போட்டி நடத்தப்படுகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இப்போட்டி மூன்று பிரிவாக நடைபெறவுள்ளது. மாணவர் பிரிவு, இளையோர் பிரிவு, பொதுப் பிரிவு என மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மாணவர் பிரிவு

#TamilSchoolmychoice

பங்கேற்புத் தகுதி : 16 முதல் 25 வயது வரை

தலைப்பு : ஊக்கம்

யாப்பு : நாலடிக் கொச்சகக் கலிப்பா 2 அல்லது அறுசீர் விருத்தம் – வாய்பாடு  (மா மா காய்) (2 விருத்தங்கள் மட்டும்)

பரிசுத்தொகை : யாப்புப் பிழையின்றி எழுதும் 5 மாணவருக்குத் தலா RM 100 வழங்கப்படும்.

இளையோர் பிரிவு

பங்கேற்புத் தகுதி : 26 முதல் 40 வயது வரை

தலைப்பு : ஆக்கம்

யாப்பு : அறுசீர் விருத்தம் காய் காய் காய் காய் மா தேமா

(சீர் 1க்கும் – சீர் 5க்கும் மோனை அமைதல் வேண்டும்)

(8 விருத்தங்கள் மட்டும்)

பரிசுத் தொகை :

முதல் பரிசு – RM 1000.00

இரண்டாம் பரிசு – RM 750.00

மூன்றாம் பரிசு – RM 500.00

நான்காம் பரிசு – RM 400.00

6 பேருக்கு ஊக்கத்தொகை- 300.00 வழங்கப்படும்.

பொதுப்பிரிவு

பங்கேற்புத் தகுதி : 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்

தலைப்பு : தாக்கம்

யாப்பு : எண்சீர் விருத்தம்; வாய்பாடு- (காய் காய் மா தேமா)

(8 விருத்தங்கள் மட்டும்)

பரிசுத் தொகை:

முதல் பரிசு – RM 1500.00

இரண்டாம் பரிசு – RM 1000.00

மூன்றாம் பரிசு – RM 750.00

7- வருக்கு ஊக்கத்தொகை- 300.00 வழங்கப்படும்.

பொது விதிமுறைகள்

  1. மலேசியர்கள் மட்டுமே பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.
  2. கவிதைகள் சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும். இதற்கு முன்னர் வெளிவந்த மரபு கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  3. கவிதை, யாப்புப் பிழையின்றியும் உணர்வுச் செறிந்ததாகவும் , உவமைச் சிறப்புடையதாகவும் இருத்தல் வேண்டும்.
  4. மரபு கவிதை கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருத்தல் கட்டாயம். (60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பின் கையால் எழுதி அதனைப் படம் எடுத்து மின்னஞ்சல் செய்யலாம். (WhatsApp) பகிரிவழி /அஞ்சல்வழி அனுப்பலாம்) – சிக்கல் ஏற்படின் ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.
  5. போட்டிக்கான கவிதைகள், ‘pdf’ கோப்பு வடிவில் அனுப்பப்பட வேண்டும்.
  6. எழுத்துரு Arial Unicode MS-யில் இருத்தல் வேண்டும்.
  7. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதைகளில், சிறந்த பத்துக் கவிதைகள் தெரிவு செய்யப்படும்.
  8. சிறந்த பத்துக் கவிதைகளுக்குரிய படைப்பாளர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்; அங்கு வழங்கப்படும் தலைப்பை ஒட்டி மரபு கவிதை புனைதல் வேண்டும். (மாணவர் பிரிவில் ஐவர் மட்டுமே அழைக்கப்படுவர்.)
  9. நேர்முகத் தேர்வில் எழுதப்படும் பத்துக் கவிதைகளில் முதல் நான்கு நிலை பரிசுகளுக்கான கவிதை தெரிவு செய்யப்படும். மேலும், எஞ்சி இருக்கும் ஆறு கவிதைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  10. நேர்முகத் தேர்விற்கான தேதி, பரிசளிப்பு விழாவிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

11.போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில், படைப்பாளர்கள், வளர்தமிழ் மன்றத்தினரையோ பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரையோ எவ்வகையிலும் தொடர்புகொள்ளுதல் கூடாது.

  1. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  2. படைப்புகளை அனுப்பவேண்டிய இறுதி நாள் 30 சூன் 2020. குறிப்பிட்ட தேதிக்குப் பின் அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  3. முதல் இரண்டு நிலை வெற்றியாளர்கள், தங்களின் கவிதையை மேடையில் படைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
  4. படைப்பாளர்கள் தங்கள் கவிதையுடன் தங்களுடைய முழுத் தகவலையும் அனுப்புதல் வேண்டும்.
  • தன்குறிப்பு (அடையாள அட்டையின் நகல், உண்மைப் பெயர், புனைப்பெயர், தொலைபேசி எண், இல்ல முகவரி, கடப்பிதழ் அளவு படம், வெளியீடு கண்ட மரபு கவிதைகளின் எண்ணிக்கை, மரபு கவிதை சார்ந்த போட்டிகளில் பெற்ற பரிசுகளின் தகவல், வெளியீடு கண்ட நூல்கள்).
  • அடையாள அட்டை நகல் இணைக்காமல் அனுப்பப்படும் கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  • உறுதிமொழிக் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.
  • மாணவர் பிரிவுக்குப் பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தின் முத்திரை இடப்பட்டிருத்தல் வேண்டும்.
  1. கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : marabukavithai2020@gmail.com

மகிழன் (011-36749858)

வளவன் (011-29599116)

நல்லார்க்கினியன் மரபு கவிதை 2020 & வளர்தமிழ் மன்றம்

அஞ்சல் முகவரி:

Dr.Manonmani Devi A/P M.A.R Annamalai

Universiti Pendidikan Sultan Idris,

Fakulti Bahasa dan Komunikasi,

Tanjong Malim, 39500

Perak.