Home One Line P1 கொவிட்-19: 66 காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்!

கொவிட்-19: 66 காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்!

643
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொத்தம் 66 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 1,225 காவல் துறைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் உள்பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 155 மூத்த காவல் துறைப்  பணியாளர்கள்,   381 குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.”

முன்னதாக, நாடெங்கிலும் தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்து வருவதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.