இலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இலண்டன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்னேற்றத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுவாசக் கருவி உதவி இல்லாமல் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
“அவருக்கு சுவாசக் கருவி உதவி தேவையில்லை” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், ஜோன்சனுக்கு நிமோனியா பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
55 வயதான ஜோன்சன், மார்ச் 27-ஆம் தேதியன்று கொரொனாவைரஸ் தொற்றுக்கு ஆளானதாக அறிவித்தார்.
இதனிடையே, இன்று புதன்கிழமை வரையிலும், இங்கிலாந்தில் 55,949 உறுதிப்படுத்தப்பட்ட கொரொனாவைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் 6,171 பேர் இறந்துள்ளனர்.