Home One Line P2 ஒரே நாளில் 35 பேர் மரணம்- இந்தியாவில் தீவிரமடையும் கொவிட்-19!

ஒரே நாளில் 35 பேர் மரணம்- இந்தியாவில் தீவிரமடையும் கொவிட்-19!

711
0
SHARE
Ad

புது டில்லி: உலகமெங்கிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்ற கொவிட்-19 நோய்த்தொற்று உலக நாடுகளின் அச்சத்திற்கு வித்திட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த நோய்த்தொற்றுக் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 149- ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாட்டில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். ஆயினும், இத பாதிப்பு தொடர்ந்தார் போல அதிகரித்துக் கொண்டே செல்வதால், இந்த நடைமுறை ஜூன் மாதம் வரையிலும் நீட்டிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.