ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனிதாபிமானத் துறையில் பணியாற்றும் 50- க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒத்துழைப்பால் குழந்தைகளுக்கு கொவிட்-19-ஐப் புரிந்துகொள்வதற்கு உதவும் புதிய கதை புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் உதவியுடன், அதாவது ‘அரியோ’, “மை ஹீரோ இஸ் யூ, ஆவ் கிட்ஸ் கென் பைட் விட் கொவிட் -19!” நூல், குழந்தைகள் தங்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் கொரொனாவைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதையும், புதிய மற்றும் விரைவாக மாறிவரும் எதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது கடினமான உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் விளக்குகிறது.
இந்த புத்தகம், முதன்மையாக 6-11 வயதுடைய குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில், உலகெங்கிலும் இருந்து 1700- க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொவிட்-19 தொற்றுநோயை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்வர்.
கதை மற்றும் அதன் செய்திகள் வெவ்வேறு பின்னணியிலிருந்தும் கண்டங்களிலிருந்தும் குழந்தைகளுடன் எதிரொலிக்கின்றன என்பதை உறுதி செய்வதில் கதை மற்றும் விளக்கப்பட ஆசிரியர் ஹெலன் படக் மற்றும் திட்ட குழுவின் உள்ளீடு விலைமதிப்பற்றது.
முடிந்தவரை அதிகமான குழந்தைகளை அடைய, இந்த புத்தகம் பரவலாக மொழிபெயர்க்கப்படும், தற்போதைக்கு ஆறு மொழி பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. மேலும், இது ஓர் இணைய மற்றும் ஒலி தயாரிப்பு புத்தகமாகவும் வெளியிடப்படுகிறது.