Home One Line P1 கொவிட்-19: 23 வயது இளம் பெண்ணின் மரணம் தாமதமாக சிகிச்சைப் பெற்றதனால் ஏற்பட்டது!

கொவிட்-19: 23 வயது இளம் பெண்ணின் மரணம் தாமதமாக சிகிச்சைப் பெற்றதனால் ஏற்பட்டது!

641
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்புக் காரணமாக மலேசியாவில் உயிரிழந்த இளம் வயது பெண்ணாக, நேற்று வியாழக்கிழமை சரவாக்கில் மரணமுற்ற 23 வயது பெண் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குத் தாமதமாக வந்ததால் இது நிகழ்ந்ததாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட இந்நோயாளியின் நிலை ஏற்கனவே நான்காவது கட்டத்தின் கடைசி கட்டத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

“எனவே இன்று (நேற்று வியாழக்கிழமை) எங்களுக்கு 23 வயது மற்றும் சுவாசக் கருவி உதவி தேவைப்படும் இளம் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளது. இந்நோயாளிக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர் தாமதமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.”

“நான் சொன்னது போல் (மருத்துவமனைகளுக்கு) வரும் நோயாளிகளில் 88 விழுக்காட்டினர் 1 மற்றும் 2-வது கட்டங்களில் உள்ளனர். இருப்பினும், இந்த நோயாளி நான்காவது கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்தார். எனவே அவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்பட்டது” என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 30-ஆம் தேதியன்று சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 9-ஆம் தேதியன்று காலை 9.42 மணிக்கு இறந்தார்.