Home One Line P1 கொவிட்-19: அடிப்படை மாற்றங்களோடு மலேசியர்களின் வாழ்க்கை- பணித் தொடரும்!

கொவிட்-19: அடிப்படை மாற்றங்களோடு மலேசியர்களின் வாழ்க்கை- பணித் தொடரும்!

640
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பிலிருந்து வெளிவந்த பிறகு மலேசியர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பணி முறைகள் அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைக் குழு (ஈஏசி) கொவிட் -19- க்குப் பிந்தைய மீட்புத் திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும்,  மேலும் இது இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 பாதிப்புக்குப் பின் ஒரு புதிய உலகமாகவும், புதிய மலேசியாவாகவும் இருக்கும். இங்கு நிறைய காணொளி சந்திப்புகள் இருக்கும், வீட்டிலிருந்து பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் அதிகமான மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருப்பார்கள்.”

“அதிக மின்னியல்மயமாக்கல் மற்றும் இணைய வணிகத்திற்கான யுகமாக மாறும்.” என்று அவர் கூறினார். மலேசியா தொடர்ந்து சிறப்பாக செயல்படும், ஆனால் சில அடிப்படை மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் கூறினார்.

இதன் மூலமாக அரசாங்கம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டது மற்றும் பலவீனமான பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.