கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த பின்னர் அப்பகுதி சிவப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25- ஆக உயர்த்தியுள்ளது.
40- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்படும், ஆரஞ்சு மண்டலங்கள் (20-40 சம்பவங்கள்), மஞ்சள் மண்டலங்கள் (1-19 சம்பவங்கள்) மற்றும் பசுமை மண்டலங்கள் (பூஜ்ஜிய சம்பவங்கள்).
முன்பு 34 சம்பவங்கள் பதிவான உலு சிலாங்கூரில் இப்போது 43 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் உள்ள ஆறு சிவப்பு மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பிற மாவட்டங்களான உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் சிப்பாங் சிவப்பு மண்டலங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் பசுமை மண்டலம் எதுவும் இல்லை.