Home One Line P1 கொவிட்-19: நோயிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு!

கொவிட்-19: நோயிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு!

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளுக்கு மீண்டும் அத்தொற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நோய் மீண்டும் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தபோதிலும், நோயாளிகள் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும், சமூக இடைவெளி, சுகாதாரம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக எதிர்மறையான முடிவுகளைக் கொண்டிருந்தாலும், மீண்டும் தொற்றுவதற்கு வாய்ப்பு உண்டு”

” சில நேரங்களில் போதுமான நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லை. ”

நேற்றைய நிலவரப்படி, 1,830 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 222 பேர் குணமடைந்துள்ளனர். இது புதிய சம்பவங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த பாதிப்பிலிருந்து விடுபட்ட நோயாளிகளின் நிலையை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நோய்த்தொற்று சம்பவங்கள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள சிகிச்சையைப் பின்தொடரும் என்றும் அவர் கூறினார்.