Home One Line P1 கொவிட்-19: மூவார் மாவட்டம் 27-வது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது!

கொவிட்-19: மூவார் மாவட்டம் 27-வது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது!

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 44 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்த பின்னர் கொவிட் -19 சிவப்பு மண்டலமாக பட்டியலிடப்பட்ட 27-வது மாவட்டமாக மூவார் இருப்பதாக சுகாதார அமைச்சின் விளக்கப்படம் தெரிவித்துள்ளது.

“3-வது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று தொடங்குகிறது. கொவிட் -19 சங்கிலியை உடைக்க நாம் வீட்டிலேயே இருப்பது முக்கியம், ”என்று சுகாதார அமைச்சு இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் உள்ள பிற சிவப்பு மண்டலங்கள் கீழ்வருமாறு:

பெட்டாலிங், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான், சிப்பாங் மற்றும் உலு சிலாங்கூர் (சிலாங்கூர்)
செராஸ், கெப்போங், லெம்பா பந்தாய் மற்றும் திதிவாங்சா (கோலாலம்பூர்)
பத்து பகாட், ஜோகூர் பாரு, குலுவாங் மற்றும் மூவார் (ஜோகூர்)
ஹிலிர் பேராக் மற்றும் கீந்தா (பேராக்)
சிரம்பான் மற்றும் ரெம்பாவ் (நெகிரி செம்பிலான்)
கோத்தா பாரு (கிளந்தான்)
குவாந்தான் மற்றும் ஜெராந்துட் (பகாங்)
ஜாசின் மற்றும் மலாக்கா தெங்கா (மலாக்கா)
புத்ராஜெயா (கூட்டரசுப் பிரதேசம்)
கூச்சிங் மற்றும் சமாராஹான் (சரவாக்)
தாவாவ் (சபா)