Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக 13 சிறைக் கல்வி மையங்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக 13 சிறைக் கல்வி மையங்கள்

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குற்றவாளிகளுக்கான தடுப்பு மையங்களாக 13 சிறை கல்வி மையங்களை உள்துறை அமைச்சகம் நிர்ணயித்து அவற்றின் பட்டியலை அரசாங்கப் பதிவேட்டிலும் பதிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஏற்படும் நெரிசல் பிரச்சனையை தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் 13 சிறைக் கல்விக்கூடங்களை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தடுப்பு மையங்களாக மாற்றுவதால், கூடல் இடைவெளி தொடர்பான பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை குற்றவாளிகள் கல்விக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், விதிகளும் சட்டமும் சிறைவாசம் போன்றவை என்றும், சிறைகளுக்குரிய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.