கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் நாட்டில் கொவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன்முதலில் மார்ச் 18- ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்டது. ஆனால், அது முடிவடைவதற்குள் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 28 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பு ரம்லான் மாதத்தின் முதல் வாரம் வரை இருக்கும்.
பொது மக்களின் அதிகப்படியான இணக்கத்தை உறுதி செய்வதற்காக, இன்று முதல், இந்த உத்தரவை மீறும் எவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) பிரிவு 24-இன் கீழ், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும், அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டகள் விதிக்கப்படலாம் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.