Home One Line P2 பிரான்ஸ் : ஒரே கடற்படைக் கப்பலில் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று

பிரான்ஸ் : ஒரே கடற்படைக் கப்பலில் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று

609
0
SHARE
Ad
பிரான்ஸ் கடற்படையில் ‘சார்ல்ஸ் டி கால்’ விமானந்தாங்கிக் கப்பல் (கோப்புப் படம்)

பாரிஸ்- பிரான்ஸ் நாட்டின் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலாக முன்னணியில் செயல்படும் ‘சார்ல்ஸ் டி கால்’ என்ற பெயர் கொண்ட கப்பலில் பணிபுரியும் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக அந்நாட்டின் ஆயுதப் படைகளுக்கான அமைச்சு இன்று புதன்கிழமை அறிவித்தது.

அந்தக் கப்பலில் பணிபுரியும் கடற்படையினர் மற்றும் அந்தக் கப்பலின் துணைக் கப்பல்களில் பணி புரிபவர்கள் என 1,767 பேர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 668 பேர்களுக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்களில் 31 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

உலக அளவில் 2.06 மில்லியன் கொவிட்-19 பாதிப்புகள்

#TamilSchoolmychoice

இதற்கிடையில் உலக அளவில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.06 மில்லியனைத் தாண்டியுள்ளது. மரண எண்ணிக்கை 137,000 -ஐத் தாண்டியுள்ளது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகம் உலக அளவிலான கொவிட்-19 பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வெளியிட்டு வருகிறது.

அதன்படி, அமெரிக்காவில் மட்டும் 638 ஆயிரம் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மரண எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது.