கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கும் வகையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க அவரவரின் பொறுப்புகள் பற்றிய புரிதலை மக்களுக்கு வழங்குவதில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் பங்கு வகிக்கிறது.
அதன் துணை அமைச்சர் டத்தோ சாஹிடி சைனுல் அப்டின் கூறுகையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க பொதுமக்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்ரு தெரிவித்தார் .
“மக்கள் இரண்டு வார உத்தரவைப் பின்பற்றினால், நாம் சங்கிலியை (கொவிட்-19) நிறுத்திவிட்டு, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை முடித்துவிட்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழலாம்.”
“ஆனால், நம்மில் சிலர் ஒத்துழைக்கவில்லை. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்” என்று அவர் இன்று வியாழக்கிழமை இங்குள்ள அமைச்சக ஊழியர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் பெர்னாமாவிடம் கூறினார்.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் மலேசியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாக செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.