கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்காத அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
அரசு சட்டத்தை மீறியவர்களுக்கு சேவைகள், ஊதியம், ஊக்கத்தொகை அல்லது ஓய்வூதிய பணம் போன்ற சலுகைகள் திரும்பப் பெறப்படலாம் என்பதை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று கியூபேக்ஸ் தலைவர் அட்னான் மாட் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்ற எந்தவொரு சட்டத்திற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த உத்தரவின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எக்காரணமின்றி முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.”
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுகள் என்று அட்னான் கூறினார்.