சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை கூடுதலாக 728 கொவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களின் தொகுப்பாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இதுவரையிலும் அந்நாட்டில் மொத்தம் 4,427 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
“தங்குமிடங்களில் வேலை அனுமதி குடியிருப்பாளர்களிடையே புதிய சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் இது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மிகவும் தீவிரமாக சோதித்து தனிமைப்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளது” என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பினாங்கைக் காட்டிலும் சிறிய தீவான சிங்கப்பூரில் ஒரே நாளில் 728 சம்பவங்கள் பதிவானது ஒரு சிலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.