கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மீன் வாங்குவதை எளிதாக்குவதற்காக, மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (எல்கேஐஎம்) பொது மக்கள் வீடுகளுக்கு வீடு வீடாக விற்பனை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்த விநியோக சேவை அமல்படுத்தப்படும்.
இந்த முயற்சி தேசிய மீனவர் சங்கத்தின் (நெக்மாட்பிஸ் – nekmatbiz ) கீழ் நாடு முழுவதும் 44 மீனவர் சங்கங்களுடன் ஒத்துழைத்ததன் விளைவாக எழுந்தது என்று எல்கேஐஎம் இயக்குநர் ராஜா காலிட் ராஜா அரிபின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஆர்வமுள்ள பொதுமக்கள் www.nekmatbiz.com.my மூலம் மீன்களை வாங்குவதற்கான முன்பதிவை முன்வைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
“மீன்களை நேரடியாக பொது மக்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான முயற்சி, சந்தைகளில் நெரிசலைக் குறைக்கும் மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும். மீனவர்களின் சந்தைகளில் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட புதிய சந்தைகளில் போதுமான இருப்பு இருப்பதால் மீன் வாங்கும் போது பீதி அடைய வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
ஷாப்பி பயன்பாட்டின் மூலம் எல்கேஐஎம் மீன் விற்பனை செய்யும் என்றும், மக்கள் இனி சந்தைக்குச் செல்லத் தேவையில்லை என்றும் ராஜா காலிட் கூறினார்.