Home One Line P2 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் ஒளிப்பதிவாளர் கொவிட்-19 பாதிப்பால் மரணம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் ஒளிப்பதிவாளர் கொவிட்-19 பாதிப்பால் மரணம்

593
0
SHARE
Ad

ஹாலிவுட் – கொவிட் – 19 பாதிப்புகளால் அமெரிக்காவின் மரண எண்ணிக்கை தற்போது அதிர்ச்சி தரும் வகையில் 37,175 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 710,272 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரையில் 63,510 பேர்கள் சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.

உலகிலேயே மிக அதிகமான கொவிட் -19 மரணங்கள் அமெரிக்காவில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கும் வேளையில், ஒரு சிலர் மரணத்தையும் தழுவியிருக்கின்றனர்.

ஹாலிவுட் நட்சத்திரம் டோம் ஹேங்க்ஸ் தம்பதியர் கொவிட்-19 தொற்று கண்டதைப் பகிரங்கமாக அறிவித்து, பின்னர் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர்.

ஆனால், 5 முறை ஆஸ்கார் விருதுகளுக்கு, ஒளிப்பதிவுப் பிரிவுக்கென பரிந்துரைக்கப்பட்ட புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் அலென் டாவியாவ் (Allen Daviau -படம்) தனது 77-வது வயதில் கொவிட்-19 பாதிப்பால் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி (ET) கலர் பெர்ப்பள் (Color Purpole) போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி முத்திரை பதித்தவராவார்.

இவரைப் போல ஹாலிவுட்டின் பல துறைகளில் பணிபுரியும் மேலும் பல கலைஞர்களை கொவிட்-19 உயிர்ப்பலி கொண்டுள்ளது.