Home One Line P1 கொவிட்-19: உலகளவில் 2.4 மில்லியன் சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: உலகளவில் 2.4 மில்லியன் சம்பவங்கள் பதிவு!

441
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் மொத்தமாக கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் 80,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அதிகரித்து 2.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்றுவரை, ஆறு நாடுகளில் 100,000-க்கும் மேற்பட்ட கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

755,000- க்கும் அதிகமான நேர்மறையான சம்பவங்களுடன் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது.

#TamilSchoolmychoice

ஸ்பெயின் மற்றும் இத்தாலி முறையே 196,000 மற்றும் 178,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், பிரான்சில் நேர்மறையான சம்பவங்கள் 154,000-ஐ தாண்டியது. ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக 145,000 சம்பவங்கள் பதிவானது.

பிரிட்டனில் வெள்ளிக்கிழமை 100,000 சம்பவங்கள் பதிவாகியது. இப்போது கிட்டத்தட்ட 6,000 புதிய சம்பவங்களின் அதிகரிப்பு ஏற்பட்டு மொத்தம் 121,000 சம்பவங்களை அந்நாடு பதிவு செய்துள்ளது.

கொவிட் -19 தொற்று இப்போது 185 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இருப்பினும், இந்த நோயிலிருந்து மீட்கப்பட்ட மொத்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 611,000- ஐ தாண்டியுள்ளது.