Home One Line P1 “மலேசியர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதுதான் எனக்கான சிறப்பு பிறந்தநாள் பரிசு”- நூர் ஹிஷாம்

“மலேசியர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதுதான் எனக்கான சிறப்பு பிறந்தநாள் பரிசு”- நூர் ஹிஷாம்

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) தனது 57-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இது குறித்து நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஏப்ரல் 21- ஆம் தேதி எனது பிறந்தநாளுடன் இணைந்து, மலேசியர்கள் வீட்டிலேயே தங்கி உயர் சுகாதாரத்தை கடைபிடித்தால் அதுவே எனக்கு சிறப்பு பரிசு.” என்று புன்னகையுடன் கூறினார்.

கொவிட்-19 பாதிப்பு நாட்டில் தொடங்கியதிலிருந்து ஊடகங்கள் மற்றும் மலேசியர்களின் மையமாக இருக்கும் சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாமுக்கு இன்றுடன் 57 வயதாகிறது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு நாளும், மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியில் அவர் தோன்றும் போது, நாட்டில் பதிவான அண்மைய சம்பவங்கள் மற்றும் பிற சுகாதார விளக்கங்களையும் அவர் வழங்குவார்.

இதனிடையே, நேற்று அவர் கொவிட் -19 பாதிப்புக்கான சாதகமான செய்தியைக் கொண்டுவந்தார். அதாவது நேற்று திங்களன்று மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட புதிய நேர்மறையான சம்பவங்களின் எண்ணிக்கை மார்ச் 12-ஆம் தேதிக்குப் பின்னர் மிகக் குறைவாகப் பதிவானதை வெளியிட்டார். 36 புதிய சம்பவங்கள் நேற்று பதிவானது.

அனைத்து மலேசியர்களையும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டு ஒரு செய்தியை ​​சுகாதார இயக்குநர் வழங்கினார். மேலும் உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்கும் முயற்சியாக அவரது பிறந்தநாள் பரிசாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.