Home One Line P2 பழம்பெரும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் ஜீன் டீச் 95-வது வயதில் காலமானார்!

பழம்பெரும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் ஜீன் டீச் 95-வது வயதில் காலமானார்!

670
0
SHARE
Ad

ஹாலிவுட்: ஆஸ்கார் விருது பெற்ற வரைகலை ஆசிரியரும் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி உயிர்ச்சித்திர இயக்குநருமான ஜீன் டீச் தமது 95 வயதில் காலமானார்.

ஏப்ரல் 16, வியாழக்கிழமை, ப்ராக் நகரில் உள்ள தனது குடியிருப்பில் அவர் காலமானார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை.

ஜீன் ‘எதிர்பாராத விதமாக’ இறந்தார் என்று அவரது செக் வெளியீட்டாளர், பீட்டர் ஹிம்மல் தமது டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தியை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

ஜீன், அவரது முழுப்பெயர் யூஜின் மெரில் டீச் (Eugene Merrill Deitch).1958- ஆம் ஆண்டில், சிட்னிஸ் பேமிலி டிரி (Sidney’s Family Tree) திரைப்படத்திற்காக டீச் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

1960-ஆம் ஆண்டில் தனது முன்ரோ (Munro) திரைப்படத்திற்காக சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 1964- ஆம் ஆண்டில் அதே பிரிவில் மேலும் இரண்டு முறை ஹியர்ஸ் நுட்னிக் (Here’s Nudnik) மற்றும் ஆவ் டு அவோய்ட் பிரேண்ட்ஷிப் (How to Avoid Friendship) திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.