Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தற்போதைக்கு தீர்மானிக்க இயலாது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தற்போதைக்கு தீர்மானிக்க இயலாது!

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 அன்று நிறுத்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பதை சுகாதார அமைச்சினால் தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது என்று அதன் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீட்டுக் கொள்ளப்பட்டால் கூடல் இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீட்டுக்கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாக நாம் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழக மாணவர்கள் வீடு திரும்ப விரும்புகிறார்கள். நிலையங்களில் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது முக்கியம்.”

“மேலும், தனிநபர்களுக்கு இடையில் கூடல் இடைவெளி நடைமுறையில் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எப்போதும் உங்கள் கைகளை கழுவுங்கள், ”என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு கோடிட்டுக் காட்டிய தடைக் கட்டுப்பாட்டின் ஆறு நடைமுறைகள் அல்லது வெளியேறும் உத்திகளையும் அவர் அறிவித்தார்.

1. கொவிட்-19- இன் பரிமாற்றம் குறைவாக இருக்க வேண்டும் அல்லது பரிமாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
2. தனிமைப்படுத்துதல், பரிசோதனைகள் மற்றும் ஒவ்வொரு தொடர்புகளையும் கண்டறிய சுகாதார அமைப்பிற்கு திறன் இருக்க வேண்டும்.
3. சிவப்பு மண்டலங்களில் தொற்று குறைந்து அல்லது அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
4. கூடல் இடைவெளி மற்றும் கை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.
5. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சம்பவங்களின் அபாயத்தைக் குறைக்க எல்லைக் கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.
6. புதிய சமூக சூழ்நிலைகளில் அன்றாட வாழ்க்கையை முழு சமூகமும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் .