Home One Line P2 கொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்!

கொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்!

445
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமெரிக்காவுக்கான குடி நுழைவைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

“கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலின் உச்சத்தில், எங்கள் அமெரிக்க குடிமக்களின் வேலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தில் இருக்கிறோம். அமெரிக்காவில் குடிநுழைவுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவேன்” என்று டிரம்ப் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆயினும், அந்த ஆணையில்  கையெழுத்திடுவதற்கான காலக்கெடுவை அவர் வழங்கவில்லை.

#TamilSchoolmychoice

நாட்டில் 42,000- க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொவிட்-19 நோயைச் சமாளிக்கத் தவறியதாக அதிபர்  மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நோய்  பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அமெரிக்கா சமீபத்தில் கனடா மற்றும் மெக்சிகோவுடனான தனது எல்லைகளை மூடியது.

கொவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட 787,000 சம்பவங்கள் மற்றும் 42,308 இறப்புகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. 72,700- க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு 170,000- க்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.