Home One Line P2 கொவிட்-19: சிங்கப்பூரில் ஜூன் 1 வரை தடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!

கொவிட்-19: சிங்கப்பூரில் ஜூன் 1 வரை தடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!

365
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கொவிட்-19 பாதிப்பின் தொடர் சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையை அறிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க அக்குடியரசால் எடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது. அதாவது ஜூன் 1 வரை மேலும் நான்கு வாரங்களுக்கு அக்குடியரசில் தடைக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமை குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை பேசிய லீ, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர், அல்லது யாரிடமிருந்து பாதிக்கப்பட்டனர் என்பது அவர்களுக்குத் தெரியாத நிலையில், இந்த தொடர்பில்லாத சம்பவங்களின் எண்ணிக்கையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“துரதிர்ஷ்டவசமாக எண்கள் குறையவில்லை. மேலும் சமூகத்தில் இன்னும் மறைக்கப்பட்ட இடங்கள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. அவை தொடர்பில்லாத இந்த நிகழ்வுகளின் ஆதாரமாக இருக்கின்றன. அவற்றை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ஆம் தேதி இந்த தடைக் கட்டுப்பாடு நடவடிக்கைத் தொடங்கியது. இது வருகிற மே 4- ஆம் தேதி முடிவடைய இருந்தது.

சமீபத்திய நாட்களில் உள்நாட்டு மக்களிடையே உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், இந்த நோய் தொடர்பான தொடர் சங்கிலி குறையத் தொடங்கியது என்பதையும் லீ ஒப்புக் கொண்டார்.

“தங்குமிடத்தில் இருந்து மக்களுக்கு ஒரு பரிமாற்றம் இருந்தால், அதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மேலும் புதிய சம்பவங்கள் உருவாகி கட்டுப்பாடில்லாமல் பரவுவதைத் தடுக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

எனவே, அந்த நோக்கத்தை அடைவதற்கு, மேலும் பாதுகாப்பான நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி, சிங்கப்பூர் குடியரசில் கூடுதலாக 1,111 கொவிட்-19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக 9,152 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.