Home One Line P1 கொவிட்-19: சபாவில் 85 விழுக்காட்டினர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை!

கொவிட்-19: சபாவில் 85 விழுக்காட்டினர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை!

308
0
SHARE
Ad
படம்: சபா சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ  டாக்டர் கிறிஸ்டினா ருண்டி

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளில் 85 விழுக்காட்டினர் பேர் அறிகுறியில்லாமல் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கொண்ட சபா வாழ் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது முக்கியம் என்று சபா சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ  டாக்டர் கிறிஸ்டினா ருண்டி கூறினார்.

இது குறித்து தெரியாமல் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு, நோயாளிகள்  தொற்றுநோயை பரப்பக்கூடும் என்று அவர் கூறினார்.

“மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 293 கொவிட்-19 நேர்மறை சம்பவங்களில், 249 அல்லது 85 விழுக்காட்டினருக்கு  அறிகுறிகள் இல்லை என்று கண்டறியப்பட்டது.

#TamilSchoolmychoice

“இது போல, தனிமைப்படுத்தல்,  வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

தீபகற்பம் மற்றும் தாய்லாந்து, இந்தோனிசியா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்த மக்களை,  சபா சுகாதாரத் துறை தொடர்பு கொண்டு வருவதாக டாக்டர் கிறிஸ்டினா கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் 24 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 53 பேர் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.