கோலாலம்பூர்: இந்து மத சடங்குகளை இணையத்தில் நடத்த முடியாது என்று மலேசிய இந்து சங்கம் கூறுகிறது. கொவிட் -19 காரணமாக இஸ்லாமிய திருமணங்கள் இணையம் வாயிலாக நடத்தப்படலாம் என்று அறிவித்ததை அடுத்து அது இவ்வாறு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களைப் போலல்லாமல், இந்துக்களின் திருமண பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் செய்ய இயலாது எனவும், அவை நேருக்கு நேர் செய்யப்பட வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.
“இந்துக்கள் தங்கள் திருமணங்களை தேசிய பதிவுத் துறையில் பதிவு செய்வது கட்டாயமாகும்,” என்று அவர் கூறினார்.
“ஆனால் நீங்கள் பாரம்பரிய இந்து பழக்க வழக்கங்களைப் பின்பற்றினால், இணையத்தில் செய்ய முடியாத விஷயங்கள் உள்ளன. திருமணம் தேசிய பதிவுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அது இந்து வழக்கத்திற்கு இணங்காத வரை, அது ஒரு முறையான திருமணமாகக் கருதப்படுவதில்லை, ”என்று அவர் கூறினார்.
“நிகழ்த்தப்படும் ஒவ்வொரு விழா மற்றும் சடங்கிற்கும் அதன் தனித்துவமான அர்த்தம் உள்ளது,” என்று அவர் கூறினார்.